பால்ய காலம்

 


காத்தாடி

-----------


பித்தானற்ற

காக்கி டவுசரை

தொப்புளோடு இறுகக் கட்டி,

காய்ந்த பனையோலையை

கூட்டல் குறியீடாக வைத்து

வேலி முள்ளால் சோளத்தட்டைப்

பிரம்பில் இணைத்து ,


கம்மாய்க் கரையில் சேக்காளிகளோடு

ஜோடி போட்டு ஓடுகையில்

காத்தாடி பம்பரமாய் ரொங்கும்.

நினைவுகளை மட்டுமே

அசை போட முடிகிறது

நகரங்களிலிருந்து பால்யத்தை !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments