ஓடும்நீரில்
ஒதுங்கும்
சரளையாய்
உன்
நினைவு!
உன்
நினைவுக்காற்றில்
இலைகளாய்
என்
இதயம்!
அம்மான்மகன்
உன்
வரவையெண்ணி
இம்மான்
காத்திருக்கு;
பெண்மானும்
துணையிருக்கு!
அக்கரைக்குப்
போனமச்சான்
எக்கணமும்
திரும்புவேன்னு
இக்கரையில்
நானிருக்கேன்-
ஏக்கத்திலே
இளைச்சிருக்கேன்!
அந்தி
சாயஅந்த
சந்திரனும்
வந்தாச்சு;
அல்லிமலர்
பூத்திருச்சு!
மயில்தேடி
ஓடிவரும்
மஞ்சனத்தி
ஆனாய்-உன்
குயில்பாட்டு
இங்கிருக்க
கூவும்குரல்
எங்கேநீ...?
மு.மகேந்திர பாபு.
படம் - முகநூல்.
0 Comments