மாணவன்

 

மாணவன்.


உருவம் மாறிவிட்டது

குரல் வன்மையடைந்துவிட்டது.

என் நினைவுப் புத்தகத்தில்

பார்த்த வரிகள்தான்.

சற்றே தடுமாறுகிறேன்.

பத்தாண்டுகளுக்கு முந்தைய

வகுப்பறை நிகழ்வுகளைச் சொல்லி

நினைவில் தீமூட்டுகிறான்.

பற்றி எரியத் தொடங்குகையில்

அவன் கரம் பற்றுகிறேன்.

சற்று நேரத்தில் விடுவித்து

உரையாடலால் 

உள்ளம் தொடுகிறான்.

சிலிர்க்கத் தொடங்குகிறது மனசு

தந்தையான பொழுதைக் காட்டிலும் !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments