பெண் சிசுவின் கதறல்

 

பெண் சிசுவின் கதறல்



நாஞ்செஞ்ச

பாவந்தான் என்ன ?

நீ

என்னை ஏன் கொன்ன ?


பத்துமாசம்

சுமந்துதானே பெத்த ?

என் கழுத்த நெரிச்சுக்

கொல்லும் போதே

நீயும் செத்த.


முள் மண்டிக் கெடக்குது

ஓன் மனசு.

பிறந்து ரெண்டு நாத்தானே

ஆகுது என் வயசு.


தவறான தொடர்புனாலே

நான் பிறந்தேனோ ?!

பத்துமாசம் இருந்துவிட்டு

படக்குனுதான் இறந்தேனோ ?


தப்பெல்லாம் 

செஞ்சது நீ.

தப்பமுடியாது

உனை வாட்டும்

என் ஞாபகத் தீ.


யாருக்குப் பயந்து

இந்தச் செயல் செஞ்ச ?

பூப்போல மலர்ந்துவந்த

இந்தப் பிஞ்ச?


நாய் கடிச்சு நான்கெடக்கேன்

வேலிப் புதர்ல.

என்ன தாயே !

எனக்கு வந்த கொடும

புரியாத புதிர்ல.


பெண் குழந்ததான்

ஒன்ன வாழவைக்கும்.

மகாராணி போல முதுமையில

மனசால ஆளவைக்கும்.


என்னோட போகட்டும்

இந்த நெல.

வேணாம் செய்தியா 

இன்னொரு பெண்சிசுக் கொல.


இன்றைய ( 14 - 09 - 14 ) நாளிதழ் செய்தி கண்டு மனம் கனத்து எழுதியது )


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments