பசு

 


பசு

இந்த இடம்தான் நான்
கன்றாய் இருந்த போது
என் அம்மாவோடு
ஒன்றாய் வந்து
நன்றாய் புல்
மேய்ந்த நிலம் .

நாட்களின் நகர்தலில்
தாயாகி வந்து பார்க்கிறேன் .
நெல்லும்
புல்லும் விளைந்த நிலத்தில்
கல்லைப் பரப்பி இருக்கிறார்கள்
கல் மனசுக் காரர்கள் .

அடிமடியில்
கடைசிச் சொட்டு பால்
இருக்கும் வரை
உறிஞ்சும் மானிட இனமே !
எங்கள் வாழ் வாதரத்தில்
அடிமடியில் கை வைத்து விட்டாயே !

என் ஏக்கப் பார்வை
உன் தூக்கத்தைப் பொசுக்கும்
என்றேனும் ஓர்நாள் .
அப்போது பாலுக்கு
எதைக் குடிப்பாய்? 

Post a Comment

0 Comments