பனம் பழம்

 


பனம் பழம்
பள்ளிப் பருவத்தில்
அதி காலை எழுந்து
துண்டால் தலைப்பாகை கட்டி
தோளில் கோணிப்பை போட்டு
கொட்டாங் கச்சியின் முக்கண்ணில்
ஒரு கண்ணில் குச்சியால் சொருகி ,
வுள்ளே மெழுகு வர்த்தி ஏந்தி ,
டார்ச் லைட்டாக்கி ,
வண்டுகளின் ,பூச்சிகளின்
சப்தங்களுக்கு நடுவே
இருளில் டார்ச்சின் ஒளியில் நடந்து
கத்தாளைப் பனைக்கும்,
கருவேல மரங்களின் அடர்த்திக்குள்
இருக்கும் பனைக்கும் சென்று ,
விழுந்து கிடக்கும் பணம் பழங்களைத்
தேடி எடுத்துப் போடும்போது ,
காற்று அசைவிலா நேரத்தில்
விழுகிறது நாலு கொட்டைப்
பனம் பழமொன்று !
விழுந்த வேகத்தில்
சிதறிக் கிடக்கிறது பழம்.
கூடவே ,
நெஞ்சுக் கூட்டிலிருந்து
என் இதயத் துடிப்பும் .
எல்லா உணர்ச்சிகளும்:
Arvinth Joshua

Post a Comment

0 Comments