டயரு வண்டி

 


டயரு வண்டி.செருப்பில்லா காலோட

சிரிச்சுக்கிட்டு ஓடுனோமே !

காடுமேடு கழனியெல்லாம்

கண்மூடி ஆடுனோமே !


பத்துவகை ஸ்கின் ப்ராப்ளம்

எங்களுக்கு வரவுமில்லே !

ஆஸ்பத்திரி மருந்துக்கடைனு

மாத்திரை மருந்து தரவுமில்லே !


கவலை போக்கும் 

காப்பரிச்சை அரப்பரிச்சை லீவு !

வேப்பமரம் புளியமரம்

கிளைவிட்டு கிளை நீயும் தாவு !


உடம்ப குறைக்க நாங்க

தினமும் ஓடவும் இல்லே !

தினமும் ஓடியாடி இருப்பதாலே

எங்க உடம்பு கூடவும் இல்லே !


சந்து பொந்து சுத்திவரும்

ஒத்த டயரு வண்டி !

செலவும் இல்லே சிக்கலும் இல்லே 

சீறிப் பாயும் வண்டி !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments