குளம்

 


குளம்

--------



 (புகைப்படம் திரு. Reghu Nath தலைமை ஆசிரியர்  - கணக்கன்குடி , திருப்புவனம் )


ஊரெல்லையில் 

ஒரு குளம்.

குளித்து வந்தால்

உடம்பிற்கு நலம்.


தண்ணீரைக் கண்டதும்

வந்திடுமே பாய்ச்சல்.

வித விதமாய் 

அடிக்கலாம் நீச்சல்.


கெண்ட மீனு , கெழுத்தி மீனு

துள்ளப் போகுது.

நினைக்கும் போது மனதில்

இப்போ குழம்பா வேகுது.


சின்னஞ் சிறு குழந்தைகூட

நீச்சல் அடிக்குது.

தண்ணிக்குள்ள தாவித் தாவி

ஓடிப் பிடிக்குது.


கரையோரம் அமர்ந்தாலே

கவிதைதான் தோணும்.

உழைக்கும் வர்க்கத்திற்கு

மழைதானே வேணும்.


அலையடிக்கும் குளத்தினிலே

கப்பல் விடலாம்.

அம்மகிழ்ச்சி சிறுவர்க்கு

வானைத் தொடலாம்.


வயலெங்கும் விழுந்திருச்சி 

விரிசல்.

மழையாலே குளிரப் போகுது

கரிசல்.


வருசமெங்கும் நிறைஞ்சிருக்கனும்

குளந்தானே !

சம்சாரிக்குப் பெருகிடுமே வீட்டில்

வளந்தானே !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments