ஆசிரியர் தினம்



 

எங்கள் ஆசிரியரும் ,  பேராசிரியரும

அகவொளி  பாய்ச்சும்

ஆசிரியர் தினம்.

ஆனந்தத்தில்

பறக்குது மனம். 


வெளிச்சம் தந்தது

கரும்பலகை.

வெல்லத் தூண்டியது

நாளைய உலகை.


வகுப்பறையில்

ஆசிரியரின் பேச்சு.

பால்யத்தில் அதுதான்

உயிர் மூச்சு.


ஏணியுமாய் , தோனியுமாய்

இருந்தார்கள்.

மாணவர் ஏற்றம்கண்டு

மகிழ்ந்தவர்கள்.


ஆசிரியரின் கைதட்டல்

நம் கையைத்  தூக்கிவிடும்.

மனக் கவலைதனைப்

போக்கி விடும்.


ஆசிரியர்

நம்கண் முன் 

காட்சிதரும் கடவுள்.


தேவை 

ஆசிரியரின் ஆசி.

அவர் உடைபடும் உள்ளங்களைத்

தைக்கும் ஊசி.


தந்தை தாய்க்குப்பின்

நம் விரல் பிடித்தவர் .

நம் முகம் கண்டே

அகம் படித்தவர்.


திசை காட்டியும்

வழிகாட்டியும் அவரே ! 

எந்தச் சித்திரத்தையும்

ஏற்றுக் கொள்ளும் அவர் மனச்சுவரே !


உங்கள் மாணவனாய்

உள்ளத்தில் இருப்பதே 

எனக்குக் கிடைத்த வரம்.

வேர்விடத் தொடங்கியுள்ளது

இம்மாணவ மரம்.


என் ஆசான்களே !

 பாதம் பணிந்து கும்பிடுகிறேன்.

எந்நிலை வந்தாலும்

என்றும் மாணவனாகவே

கும்பிடுகிறேன்.


என் தமிழாசான்கள் கவிஞர் ஆ.கணேசன் மற்றும் எங்கள் பேரா.கு.ஞானசம்பந்தன் அய்யா அவர்களுடன்.


ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


மு.மகேந்திர பாபு.்

Post a Comment

0 Comments