நிபந்தனைகளின் பேரிலேயே
உணவு உண்ண அமர்கிறாள் மகள்.
சோட்டா பீம் தவிர
வேறு எந்த சேனலுக்கும்
மாறிவிடக் கூடாதாம் .
மொழிப் பிரச்சனை
அவளுக்கு இல்லை.
தமிழ் , ஆங்கிலம், இந்தி என
அனைத்திலும் பார்க்கிறாள்.
விளம்பர இடைவேளைகளின் போதெல்லாம்
உணவு உண்ண இடைவேளை
விட்டு விடுகிறாள்.
மகளுக்கு நண்பர்களான பீம்
கூட்டாளிகள்
இப்போது பகையாளிகளாக
மாறிவருகிறார்கள் எனக்கு !
மு.மகேந்திர பாபு.
ஆக்ரமிப்பு
சோட்டா பீமும்,நிஞ்சா கட்டோரியும்
மகளின் விருப்பமானதால்
பெருநேரங்களை மகள் ஆக்ரமித்தும் ,
சமையல் நிகழ்ச்சிகளாலும் ,
நெடுந் தொடர்களாலும்
மீதி நேரங்களை
மனைவி ஆக்ரமித்தும் ...
எனக்கும் தொலைக்காட்சிக்குமான
நேரம் ஒதுக்கித் தரப்படுகிறது
மின்வெட்டு நேரத்தில் மட்டும்.
0 Comments