குழாயடி

 


குழாயடி


மாங்காயத் தின்னுட்டு ஒங்கம்மா ஒன்னய  மடியில பெத்தாக ...

தேங்காயத் தின்னுட்டு எங்கம்மா 

என்னயத் தெருவுலயா பெத்தாக ? 

ஏய் ... இப்ப எதுக்கு சம்பந்தமே இல்லாமப் பாட்டுப் பாடிக்கிட்ருக்க ? 

என்னடி சம்பந்தமில்ல ?  கொடத்தக் காலால நகட்டி வச்சதுமில்லாம , எனக்கென்னேனு செக்கொலக்க மாதிரி நின்னுக்கிட்ருக்கே ?

மைனி ( மதினி ) தொட்டில்ல பிள்ளயப்  போட்ருக்கேன். எந்திருச்சுப் பாத்தான்னா ஆள் இல்லாட்டி  அழுவான். அதான் ஒரு கொடம் மட்டும் ...

ஏன்டி ... நானுந்தான் அடுப்புல  அரிசியப் போட்டு வந்திருக்கேன். பொங்கிருச்சினா நா  என்ன பண்றதாம் ?

சரி  சரி நீயே பிடி ... நீயே அடி ...

இந்த ரோசத்துக்கு ஒன்னும் கொறச்சலில்லை . வேலக்கிக்  கூப்பிட்டா ஒரு நாளும் வாரதில்ல. சொந்தம் ... சுருத்துனு போயிர வேண்டியது...

நாளக்கி ஒனக்கு கள எடுப்புக்கு வாரேன் மைனி ... போதுமா ? ஆனா ஒரு கன்டிசன். மறு நா சம்பளத்த கொடுத்திடணும். ஒகேயா ?

வாங்கிக்கோடி . சம்பளம் கொடுக்க வழியில்லாம நானென்ன  வக்கத்துப் போயா இருக்கேன் ?

சரி சரி  . இப்ப என்ன பண்றது ?

கொடத்த வை அடிச்சுவிடுதேன்.ஆமா ... கைப்பிள்ளைக்காரிக்கு ஒதவாம வேறு யார்க்கு எல்ப் பண்ணப் போறேன்.

அதானே மைனி ...


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments