ஒத்த மரம்

 


வயலோரம் ஒத்த மரம் - நம்ம

வாழ்வோட வந்த மரம்

மழ வெயில் பாராம - நித்தம்

விளையாட்டு தந்த மரம்


வெயிலுக்கு இத மாகும் - மனப்

புயலுக்கு மருந் தாகும்

வேர்முதல் உச்சி வரை - பாதம்

உறவாட விருந் தாகும்


உறவு என்றால் மரம்தானே ! - எப்பவும்

ஏந்தும் அதன் கரம்தானே !

தவிபபாறிப் போகும் நெஞ்சம் - மரம்

இருக்கட்டும் காலம் கொஞ்சம்


கட்டிப் புடிச்சுக் கொஞ்சுனா - நம்ம

அம்மாவின் நினைவு வரும்

கால மெல்லாம் காத்தா - மரம்

மகிழ்ச்சிய அள்ளித் தரும்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments