ஆசிரியர் தினம்

 


ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் !



ஆசிரியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் !

மாணவர் மனதை  அன்பினால் வெல்வோம் !


சின்னச் சின்னப் பிள்ளைகளை சீர்திருத்தும் தெய்வம்

ஆசிரியர் ஒருவராலே உலகு தினமும் உய்யும்

வகுப்பறையில் கருத்துக்கள் தேன்மழையாய்ப் பெய்யும்

மாணவரை மகிழ்ச்சியாக மாற்றத்தானே  செய்யும். !


அகரம் சொல்லி சிகரம் தொட வைப்பார்

எழுத்தாணியாலே அறிவெனும் ஆடைதனை தைப்பார்

பாட்டும் கதையும் வகுப்பறையை கலகலவென ஆக்கும்

காண்போரின் கண்கள் வகுப்பறையை நோக்கும் !


நாட்டு நடப்பை நாள்தோறும் சொல்வார்

நாயகனாய் மாணவர் மனதை வெல்வார்

குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவார்

இனிமையான பேச்சினாலே இதயங்களைத் தொடுவார் !


எங்கள் முன்னே விரிந்திருக்கும் உலகம் அவர்

ஆசிரியர் போல் அகிலத்தில் வேறு  எவர் ?

கற்றவனாய் பெயர் பெற்றவனாய் மாற்றுவார்

கவலை கொண்ட உள்ளங்களைத் தேற்றுவார்.!


கண்முன்னே நடமாடும் பகுத்தறிவு நூலகம்

காலங்களை வென்று நிற்கும் மானுடம்

எங்கள் ஆசிரியர்க்கு இணை யாருமில்லை

ஆசிரியரை மறந்துவிட்டால் நற் பேறுமில்லை !


மு.மகேந்திர பாபு , ஆசிரியர்.

Post a Comment

0 Comments