விருந்து
நண்பர் வீட்டு விழாவில் ,
நண்பகல் உணவிற்காய்
பந்தியில் அமர்ந்துன்ன ,
நாச்சுவையறிந்து மீண்டும்
கேட்கத் தோன்றுகிறது சில பதார்த்தங்களை .
ஏதோ ஒரு நெருடலில் தயக்கம் பிறக்க ,
அருகிலிருந்த நண்பர் ,
இதிலெல்லாம் கூச்சப் படக் கூடாதென
தன் அனுபவம் சொல்லி ,
சாருக்கு ஒரு குலோப்ஜாமுன் ,
சாருக்குக் கொஞ்சம் பொரியல்,
சாருக்குக் கொஞ்சம் பாயசம் என
நம்பிக்கையோடு வரவழைத்து ,
பரிமாறச் சொல்லி ,
மறக்காமல் வாங்கிக் கொண்டார்
தன் இலையிலும் .!
மு.மகேந்திர பாபு.
0 Comments