சுளுக்கு

 


சுளுக்கு

@ ஊரெல்லாம்
நண்பர்களோடு ஓடி ஆடி ,
கட்டச் சுவத்திலும் ,
கண்மாய்க் கரையிலும் குதித்து ,
நுங்கு வண்டி ஓட்டி,
கருக்குப் பனை ஏறி விழுந்து,
கபடி விளையாடி ,
கால் சுளுக்காகி ,
நொண்டி .....நொண்டி .....
நண்பர்களோடு கைத் தாங்களாகி....
@ சுளுக்குப் பாட்டி
கருப்பாயி வீட்டிற்குச் சென்று ....
விளக்கெண்ணை தடவி .....
சுளுக்கான நரம்பை
சொடக்கெடுப்பதைப்போல
எடுப்பாள் கதைகள் பல பேசி ...
மிகப் பொறுப்பாய்
கட்டணமில்லா மருத்துவராய் ....
@ இப்போதெல்லாம்
கால் சுளுக்கு என்றால்
கருப்பாயிப் பாட்டி ஞாபகம்தான் .
@ பால்ய நினைவுகளோடு
பாட்டி வேட்டிற்குச் சென்றேன் .
மண்ணாகி விட்டது பாட்டியின் வீடு
மண்ணுக்குள் போய்விட்ட
பாட்டியைபோல .!

Post a Comment

0 Comments