போதைக்கு அடிமையாகாதே !

 


போதைக்கு  அடிமையாகாதே !  (இசைப்  பாடல் )


போதைக்கு  அடிமையாகாதே  !  -அண்ணே 

நம்ம பொழப்பு  ரொம்ப  கெட்டுப்  போகும்  - குடி 

போதைக்கு  அடிமையாகாதே  !


நண்பர்  கூட்டம்  கூடச் சேர  போதை  பழகுவாய்  - கெட்ட

நண்பர்  கூட்டம்  கூடச்   சேர  போதை  பழகுவாய் 

குடும்பம்  கெட்டுப்  போனபின்னே  குடி பாதை விலகுவாய்  !


ஆரம்பத்தில்  இனிக்கும்  அந்த  நாட்கள்  தான் அண்ணே - உன்னை 

அழி குழிக்குள்  அமுக்கப்  போகும்  நஞ்சு  தான்  அண்ணே 

கொண்டாட்டத்தை  தொடக்கி  வைக்கும்  குடி  தானுங்க - உன்னை 

திண்டாட்டத்தில்  முடித்து வைக்கும்  எமன்  பாருங்க .


ஆணும்  பெண்ணும்  குடிக்கிராக  அயல்  நாட்டுல  -நீ 

குடிச்சுப் புட்டு  கொடுமை  பண்ற  ஓன்  வீட்டுல 

சிறுசு  முதல்  பெருசு  வரை  கிடக்குதையா  டாஸ்மாக்குல 

சீரழிஞ்சு  போகுதையா  நம்  பண்பாட்டுல  !          (போதைக்கு ......)


புள்ள  குட்டி  மறந்து  போகும்  இடம் தானுங்க  - நீ 

ஊத்திக்  குடிக்கும்   பார்  அது  பாருங்க

கவலைகள  மறக்கப்  போயி  குடித்தாயடா  - இன்னும் 

கவலைகளை  அதிகமாக  தூக்கிகிட்டு  சுமக்கிராயடா  ! -குடிச்சதால 


உழைச்ச  காச  ஊத்திக்  குடிச்சு  வீணடிக்கிற 

உடம்பு  ரொம்ப  கெட்டுப்  போயி  சீரழியிற 

நம்மைக்  கொல்லும்  இந்தக்  குடி  வேணாம்டா   

நாளும்  நல்லா இருப்போம்  நம்ம குடும்ப  மகிழ்ச்சியோடத்தான்  !(போதைக்கு  )


               மு. மகேந்திர  பாபு .

Post a Comment

0 Comments