கிர்மாடா

 


கிர்மாடா

-----------


அப்பா , நீங்கதான் கிர்மாடாவாம் ...


கிர்மாடா ...வா ? அப்பாவுக்கு பசுமாடா , காளைமாடானு கேட்டாத் தெரியும்.கிர்மாடா தெரியாதேப்பா ?!


பீம்ல வர்ரவன்.நான் தான் பீமாம்.நீங்க கிர்மாடா.கிர்மாடா பலசாலி.


அப்படினா சரிப்பா.


அவன் ரொம்ப கெட்டவன்பா.நீங்க கெட்டவனாம்.உங்கள நான் லட்டுத் தின்னுட்டு அடிப்பானாம்.நீங்க மயங்கி விழுந்திரனும்.சரியா ?


சரிப்பா.ஓங்கிட்டயும் நான் கெட்டவனாக அடிவாங்கனுமா ? இந்த வீட்ல அடிவாங்குற ஆளு நா மட்டுந்தானா ? 


அதெல்லாம் சொல்லக்கூடாது.டிஷ்யூம் ... டிஷ்யூம் ...


(மகளுக்கு மகிழ்ச்சி.காட்சி இனிதே நிறைவுற்றது . என்னா அடி ?!?! )


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments