பேருந்துப் பயணம்

 


அதிகாலைப் பொழுதில் 

மாநகரிலிருந்து

கிராமம் நோக்கிப் பயணிக்கும்

பேருந்தைப் போல் வெற்றிடமாக

இருந்த நான் 


கிராமத்திலிருந்து

நகர்ப்புறம் நோக்கி வரும்

நெரிசல் மிகுந்த பேருந்தைப் 

போலானேன்

உன்னைக் கண்ட பிறகு.


பயணமெங்கும் உன் நினைவுகளைச்

சுமந்தபடி ஓடுகிறது என் 

வாழ்க்கைப் பேருந்து.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments