நடப்பது நன்மைக்கு

 


நடப்பது நன்மைக்கே !


பால்யத்தில் எங்கள் ஊரிலிருந்து அருகிலிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று வர தினமும் ஏழு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.பேருந்து கட்டணம் 50 பைசா. 50  பைசா கொடுத்துப் போவதற்கு நடந்தேபோகலாம் என நண்பர்களோடு தினமும் நடந்தே போவோம்.


நடக்கையில் அலுப்புத் தெரியாமல் இருக்க ஆளுக்கொரு கதை சொல்லணும்.பெரும்பாலும் ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் கதை ஆரம்பித்து , ஏதோ ஒரு பறவை , விலங்கென கதை வளரும்.என்னவெல்லாம் தோணுதோ , வார்த்தைகள் வெளிவருகிறதோ அதுவே கதை.


பத்து பைசாவிற்கு ரெண்டு கல்கோனான் மிட்டாய் வாங்கினால் பள்ளிக் கூடம் வரையிலும் வாயில் ஒதுக்கிக் கொண்டே செல்லலாம்.


அறுவடைக் காலத்தில் கம்மங் கதிரு , கேப்பைக் கதிரு , மக்காச் சோளத் தட்டை , பாசிப்பித்தான் காய் போன்றவற்றைக் காடுகளில் பறித்து விடுமுறை நாட்களில் திங்கலாம்.


பள்ளிக்கும் , பிஞ்சக்கும் ,கண்மாய்க்கும் நடந்தே அலைந்த காலங்கள் பால்ய காலம்.


இன்றைய மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்க, அரை மணிநேரம் பேருந்திற்காக காத்திருக்கிறார்கள். என்னத்த சொல்ல ?!


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments