மரத்தின் அழுகை

 


வளம் தந்த என்னை - உன்

பலம் கொண்டு அறுக்கிறாய்

நிலம் தாங்கி நின்றேன் - உன்

நலம் பெற மறுக்கிறாய்


மண்ணை முட்டி வளர்ந்து - பின்

விண்ணைத் எட்டி உயர்ந்தேன்

கண்ணைக் கட்டி விட்டாய் - என்

கரத்தை வெட்டிக் கெட்டாய்


செந்நீர் சிந்தி அழுகிறேன் - நீ

தண்ணீரின்றி தவிப்பா யென்று

கம்பீரம் விட்டு அழுகிறேன் - நீ

கண்ணீரெ விட்டே கிடப்பாயென்று 


சுற்றம் சூழ இருந்தோம்  - நீ

குற்றம் செய்து விட்டாய்

பெருமை எண்ணம் கொள்ளாதே - இப்போ

வறுமை நிலையைத் தொட்டாய்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments