மாடு

 



ரேசன் கார்டிலும் ,

ஆதார் அட்டையிலும்,

வாக்காளர் பெயர்ப்பட்டியலிலும்

இடம் பெறவில்லையென்றாலும் ,

ஒவ்வொரு குடும்பத்தின்

உடன் பிறப்பாகவும் ,

அங்காளி பங்காளியாகவும்தான்

இருந்து வருகின்றன

ஆடுகளும் , மாடுகளும்

கிராமத்து மக்களிடம் !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments