விளம்பரம்

 


விளம்பரம்  - சக்திமசாலா


தொலைக் காட்சிகளில் அவ்வப்போது விளம்பரங்களுக்கிடையே நாடகமோ , படமோ வருவதுண்டு.சில விளம்பரங்கள் நம் முகத்தை மலரச் செய்கின்றன.சில விளம்பரங்கள் முகஞ்சுழிக்கச் செய்கின்றன.அத்தி பூத்தாற் போல ஒரு சில சுயநலத்தோடு பொது நலத்தையும் உணர்த்துகின்றன.


அப்படி பொது நலத்தை , இயற்கையை உணர்த்தி வரும்  விளம்பரம் சக்திமசாலா. மசாலாத் தனமில்லாது , மரம் வளர்க்கவும் , மழை நீரைச் சேமிக்கவும் வேண்டுமென உணர்த்துகிற விளம்பரம்.நிச்சயமாக இது தொலைக்காட்சி பார்க்கும் சிறு குழந்தைகளிடம் ஒரு சதவீதமாவது மரம் வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்பது எனது எண்ணம்.


மாற்றம் மாணவ சமுதாயத்தின் மூலம் உருவானால் மாபெரும் மகிழ்ச்சிதானே !


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments