அம்மாவின் அன்பிற்கு

 


அம்மாவின் அன்பிற்கு ...


அம்மாவின் அன்பிற்கு

ஆகாயம் சிறிதாகும்

அலை கொண்ட கடல்கூட

அவளன்பில் துகளாகும்.


உள்ளமெங்கும் அன்பைத் தேக்கும் 

கள்ளமில்லாப் பிள்ளை அவள்

காலமென்றும் அவள் காலடியில்

இருந்திட வேண்டும்

தினம் அம்மாவின் விரல் 

பிடித்தே நடந்திட வேண்டும்.


காட்டினிலே இருந்தாலும்

வீட்டினிலே இருந்தாலும்

உள்ளமெங்கும் அவள் நினைப்பில்

இருப்ப தெல்லாம் பிள்ளைதான்


பத்து பிள்ளை பெற்றாலும்

ஒத்தப் பிள்ளை பெற்றாலும்

தாயன்பு குறைவதுமில்லை

தன் பிள்ளைதனை வெறுப்பதுமில்லை


( மரமும் மனிதமும் இசைத்தட்டில் உள்ள இரண்டாவது பாடலின் பல்லவியும் , ஒரு சரணமும் ) 


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments