தத்தக்கா புத்தக்கா

 


தத்தக்கா புத்தக்கா

தவளச் சோறு

எட்டெரும எருமப் பாலு

தூத்துக் குடியில

பசுவந்து நீராட

பறவ வந்து நெல்லுக் குத்த

கூப்பிடுங்க குலவயிடுங்க

குறத்தி மக்கா கையெடுங்க.

பால்யத்தில் விளையாடிய பாடல்


முருங்கைச் சாறு குடிச்சவரே

நெத்திலிச் சாறு குடிச்சவரே

தார் தார் வாழக்காய்

தரும குத்து வாழக்காய்

புதுப் புது மங்களம்

பூமா தேவி கையெடு


கையெடு என்று சொல்லும் போது கவத்தி இருக்கும் கைய எடுக்க வேண்டும்.ஆண்டுகள் கடந்தாலும் பால்ய விளையாட்டுக்கள் மனதின் ஓரத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.


மு.மகேந்திர பாபு.

25 ஆண்டுகளுக்கு முன்பு பால்யத்தில் சிறுவர் சிறுமிகளுடன் விளையாடிய விளையாட்டில் பாடிய பாடல்.கிராமத்தில் இருந்தவர்களுக்கு இப்படிப் பாடல் அதிகம் கேட்டிருக்கலாம்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments