நீராகாரம்
என்றும் நீர்தான் ஆதாரம்
அன்று உணவே நீராகாரம்
இரவில் தூங்குது உடம்பு
பானைக்குள் தூங்குது உணவு
காலை நேரத்துப் பானம்
சம்சாரிக்குத் தினமும் வேணும்
உச்சிவர நிரம்புது லோட்டா
உற்சாகமாய் வந்திடும் டாட்டா
சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சுகமாகும்
சுடுகருவாடு கஞ்சிக்கு சுவையாகும்
வாதம் பித்தம் போக்கும்
சேதமில்லா உடம் பாக்கும்.
அண்ணாந்து குடிச்சாத் தெரியும்
ஆகாயம் கண்ணுக்குள் விரியும்
நகரத்திற்கு எங்கே புரியும் ?
வருமானம் மருத்துவமனையில் திரியும்
மு.மகேந்திர பாபு.
0 Comments