இளநீர்

 

இளநீர்


வயலுக்கும் காட்டிற்கும் சென்று
வயிற்றுப்பசியோடும்
உடல் சோர்வோடும்
வீடு வந்து சேர்கையில்
கொல்லையில் இருக்கும்
தென்னை சற்றே தெம்பு கொடுக்கும்
இளநீர் தந்து எல்லாக் காலத்திலும் .

பதநீராகவும்,
நுங்காகவும்
கோடை காலத்தில் தந்து
குளுமைப் படுத்துகிறது
பனையும் தன் பங்கிற்கு .

எந்த சேனலிலும் இதற்கான
விளம்பரம் வந்ததாகத்
தெரியவில்லை .

கலை நட்சத் திரங்களும்
கிரிக்கெட் வீரர்களும்
பன்னாட்டு குளிர் பானம் விட்டு
இளநீரின் சிறப்பை
சிறப்பிக்கலாமே ?! 

Post a Comment

0 Comments