புன்னகைக்குள் தீபாவளி

 


புன்னகைக்குள்  தீபாவளி 


சார் போஸ்ட் என்று 

வழக்கமாய் 

தூக்கி எறியும் தபால்காரர் 

நான் வரும்வரை  காத்திருந்து 

புன்னகைத்து நலம்  விசாரிப்பதிலும் ...


இரு சக்கர வாகனம் 

பழுது பார்க்கும் நண்பர் 

வீட்டிற்கு வந்து சர்வீஸ் பண்ண 

வாகனம் எடுத்துச்  செல்லும் போது 

புன்னகைப்பதிலும் .....


மின்வாரிய நண்பர் 

பீஸ் ஒன்னும் போகலையே ...

ஏதேனும் பிரச்னை இருக்கிறதா 

எனக் கேட்டு புன்னகைப்பதிலும் ....


குட் மோர்னிங் ஜி  என

 கூர்க்கா வந்து சல்யூட் அடித்து 

புன்னகைப்பதிலும் 

புதைந்து கிடக்கின்றன 

அவரவர் களுக்கான தீபாவளி மகிழ்ச்சிகள் .


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments