அழகர் வராரு

 


அழகர்  வராரு  ( சிறுவர் பாடல் )


அழகர் மலை  இறங்கி  வராரு 

வைகை  ஆற்றை நோக்கிப் போறாரு

உழவர் உள்ளம்  ஏற்றம்   பெற்றிட 

பச்சைப் பட்டுடுத்தி  காட்சி  தாறாரு !


சைவ  வைணவ  சமய ஒற்றுமை 

சரித்திரம்  படைத்தது  அழகர்  வரவிலே !

இலட்சம்  மக்கள்  திரண்டு  வந்து 

வேண்டிச்  செல்வர்  அன்பு உறவிலே  !


வேட  மிட்டுப்  பக்தர்  கூட்டம் 

வீதி  எங்கும்  நேர்த்தி  முடிக்குது  !

தண்ணி  பீச்சி  அடிக்கும்  கூட்டம் 

அழகர்  அருகிருக்க   உள்ளம்  துடிக்குது  !


மாட்டு  வண்டி  பூட்டிக்  கிட்டு 

ரோட்டு மேல  வந்தோமே  சாமி  !

உன்னை  வணங்கிப்  போன  பின்பு 

மகிழ்ச்சியிலே  தினம்  சுத்தணும்  பூமி  !


மு.மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments