புணர்ச்சி

 


புணர்ச்சி
@ மொடை அடித்து
மூனு நாளாகியும் ,
சினைக்குப் போடவில்லை கிடேரியை .
மேய்ச்சலுக்கு வரும் இடத்தில் ,
ஏதேனும் ஒரு காகாளை
அகப்படும் என்ற நினைப்பில்
கண்டு கொள்ளவில்லை .
@ மொடை நிற்பதற்குள்
சினைக்குப் போடவேண்டும் ,
இல்ல ...மாட்டாஸ்பத்திரிக்குக்
கொண்டு போங்க ....
வீட்டாரின் நச்சரிப்பு .
@ ஊருவிட்டு ஊருபோய்
காகாளை தேடி ....
கெஞ்சிக் கூத்தாடி ...
மாட்டுக் காரனிடம் ரூபாத்தாளை காட்டி ,
போதும் போதும் என்றாகி விட்டது .
@ மனிதர்களைப் போலல்ல மாடுகள் ...
இனப் பெருக்கத்திற்கு மட்டுமே !
@மு,மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments