நெடு நேரம்
நெடுந்தூர பயணம்.
கண்ணுக்கெட்டிய இடமெங்கும்
கானல் நீர்.
கண்மாய்கள் கல்லூரிகளாயின.
குளங்கள் வீடுகளாகின
நதிகள் சுருங்கி விட்டன.
தண்ணீர் தேசத்தில் இனி
கண்ணீரே அறுவடையாகலாம்.
மரங்களோடு மனிதமும்
மரித்து விட்டதோ ?
இதோ ஒரு நீர்க்குழாய்.
கண்ணுக்கு குளிர்ச்சி.
காணும் இடமெங்கும்
தண்ணீர் வேண்டுமே !
என் வேண்டலும் இதுவே !
மு.மகேந்திர பாபு.
0 Comments