பீடி

 


பீடி


எலேய் ... ஒன்னு கொடுடா ... இனி

 ஓங்கிட்ட கேக்க மாட்டேன்  என செல்லப்பன் கெஞ்ச ,  ஒனக்கு தெனமும் ஏன் உசுர வாங்குறதே பொழப்பாப் போச்சு. இப்டி ஒரு பொழப்பு தேவையா ? 


நீ என்னமும் சொல்லிட்டுப் போ ... இப்ப நீ தரலெ வீட்டுக்கு வந்து சோறு  தின்னுக்கிறமாட்டெ... ஆமா சொல்லிட்டேன் என்றான் செல்லப்பன் தனமாப்பிளை  மாடசாமியிடம்.


தலையில வட்டமாய் கட்டியிருந்த தலப்பா கட்டினை கொஞ்சம் லூசாக விட்டு , சொக்கலால் பீடிக்கட்டிலிருந்து ஒரு பீடியை மொனங்கிக் கொண்டே கொடுத்தான் மாடசாமி.


தீப்பெட்டிய யாரு ஒங்கப்பனா கொடுப்பான் ? 


இந்தா . ..  பிடிச்சுத் தொல எனத் தூக்கிப் போட ,


மெழுகு தீக்குச்சி ஒன்றை தீப்பெட்டியின் பக்கவாட்டில் உரசி , இருகைகளாலும்  காத்துக்கு அமராதபடி பொத்தி , தீக்குச்சியல் வாயில் வச்சிருந்த பீடியின் முனையை காட்டி , கப்கப்பென்று இழுக்க , பீடிக்கங்கு அனலென பரவத்தொடங்கியது  வாய்க்குள் அவனது உயிரைக் குடிக்க.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments