நிலாச் சோறு
அவிழ்க்கப்பட்ட
தலையணைப் பொட்டலத்திலிருந்து
பழைய வேட்டி ஒன்றை எடுத்து ,
கிழித்து ,
இரண்டாய் விரித்து ,
தொடையில் வைத்து
திரியாக்குகிறார் அப்பா .
மருந்தின்றி,
மூடியுடன் பழைய சாக்கில்
போட்டு வைக்கப்பட்ட
ரோக்கர் பாட்டிலோ ....
எண்டோ சல்பானோ....
ஏதோ ஒன்றின் மூடி திறந்து முகர்ந்து ,
கொமட்டலைப் போல் முகம் மாற்றி ....
தண்ணீர் ஊற்றிக் கழுவி ...
சிறு புனல் இட்டு
மண்ணெண்ணெய் ஊற்றி
தீயிட்டு விளக்கேற்றி
சாணம் பூசப் பட்ட
முற்றத்தின் நடுவில் வைக்க ....
சற்று நேரத்தில்
கூடி விட்டது சிறு கூட்டமொன்று
நிலாச் சோறு சாப்பிட ...
மின்சார மற்ற இரவில்
நிலாவும் இன்றி !
மு.மகேந்திர பாபு .
0 Comments