நுங்கு வண்டி

 நுங்குக் கூடுகளில்

வண்டியோட்டி வீதியுலா

வந்தோம்.

தொலைக்காட்சிப் பெட்டிகளும் இல்லை ,

கணினிகளும் இல்லை.

மாலை நேர சிறப்பு வகுப்புகளும் இல்லை.

ஆங்கிலம் , இந்தி வகுப்புகளும் இல்லை.

ஆடுகளுடனும் ,

மாடுகளுடனும் மகிழ்வாய்ச்

சென்றன விடுமுறைப் பொழுதுகள்.


ஒவ்வொரு முறை

கிராமத்திற்குச் சென்று வரும் போதும்

கூடவே வந்து விடுகின்றன

பால்ய நினைவுகள்.


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments