சிட்டுக் குருவி

 


சிட்டுக் குருவி
@ தினம் தினம்
பார்த்து மகிழ்ந்த
சிட்டுக் குருவிகளின்
இனம் எங்கே போனது இன்று ?
@ வீட்டு வாசலில் வந்தமர்ந்தும் ,
ஜன்னலில் வந்து நோட்டமிட்டும் ,
தொழுவத்தில் உள்ள பனை விட்டத்தில்
சோளத் தட்டைகளாலும் ,
சில்லாடைப் பஞ்சாலும் கூடு கட்டி ,
குடும்பத்தோடு வாடகை இன்றி ,
வளமாய் வாழ்ந்ததும் ........
@ விதைப்பு முதல் அறுவடை வரை
காட்டில் காலம் தள்ளி ,
இலந்தைச் செடிகளின் முட்கள் நடுவிலும் ,
கம்மன் தட்டை , சோளத் தட்டையில்
ஒரு பொறியாளனாய்
வரை படமின்றி வீடு கட்டியும் ....
@ கம்மங் கதிரின் உச்சியில்
இலாவகமாய் உட்கார்ந்து ,
ஊஞ்சலாய் ஆடி,
தலை கீழ் அமர்ந்து கதிர் தின்று .....
@ எங்களுக்கும்
சங்கம் இருக்கிறது
என்பதைக் காட்டுவதற்காய் ...
ஆயிர மாயிரம் குருவிகளோடு
படை குருவிகளாய் வந்து ...
கம்மங் காட்டையே காணாமல் போகத்
திட்டமிட்டதோ எனப் பயந்து .....
@ தகர டின்னால் தட்டி ,
ஓ....வென குரல் எழுப்பி ,
ஒருவழியாய் ஓட ..ஓட விரட்டி ....
@ அன்று காட்டை விட்டு விரட்டி .....
பின் ஊரைவிட்டு விரட்டி ...
இன்று உலகை விட்டு விரட்டி .....
நினைத்துப் பார்க்கிறோம்
சிட்டுக் குருவிகளுக்கான
நாள் இன்று என .....!
@ மு.மகேந்திர பாபு .

Post a Comment

0 Comments