செவிலியர் தினம்

 


செவிலியர் தினம் 


உடை மட்டுமல்ல

உள்ளமும் வெள்ளைதான்.

பகல் , இரவு பாராது

பணி செய்து நம்

பிணி களைபவள்.


உதிரம் சொட்டி நிற்கையில்

உறவுகளே ஒதுங்கி நிற்கையில்

அருகிருந்து தாயாய்

ஆதரவு தருபவள்.


எந்தத் தாயாயினும் தம்

சொந்தத் தாயாய்ப் பார்ப்பவள்.

ஊசி வலி போக்க

உற்சாகமாய்ப் பேசி

கவனம் திருப்பி நம்

கவலை மறக்கச் செய்பவள்.


மாத்திரைகள் தருவது

மாத்திரமல்ல இவள் பணி.மனிதம் காப்பதும் இவள் பணி.


வணங்குகிறேன்

வாழ்த்துகிறேன் .


மு.மகேந்திர பாபு.

Post a Comment

0 Comments