தென்னை நம் அன்னை
தன்னிலை மறந்த மனிதா !
என்னிலை உணர்வாயோ ?
நல் விலை கிட்டிட - என்னை
வெட்டிச் சாயப்பாயோ ?
இயற்கையை மாய்ப்பாயோ ?
தலையில் இருந்தது இளநி - உன்
தாகம் தீர்த்ததை கவனி
நீண்ட நெடுஞ் சாலை - என்னால்
ஆனது பசுஞ் சோலை
என்னை இழந்தேன் உன்னால்
மண்ணையும் இழப்பேன் உன்முன்னால்
இடம் - கருப்பாயி ஊரணி -மதுரை
0 Comments