அம்மா - சிறுவர் பாடல்

 

அம்மா

அம்மா அம்மா எங்கள் அம்மா
அன்பும் அறிவும் தந்த அம்மா
இன்னல் வந்த போதும் என்றும்
கன்னல் மொழி பேசும் அம்மா .
உதிரம் உருக்கி உயிரைக் கொடுத்தாய்
உணர்வைப் பெருக்கி மானம் வளர்த்தாய்
உள்ளம் எல்லாம் பிள்ளை நினைப்பாய்
கள்ளம் இல்லா நல்லா அணைப்பாய்
பத்து மாதம் சுமந்து பெற்று
பத்து விரல்களால் உச்சி மோந்து
பக்கு வமாய் வளர்த்து விட்டாய்
வுயர் பண்பினாலே சிகரம் தொட்டாய்
மண்ணில் நடமாடும் மகிழ்ச்சி நீதான்
என்னில் இயங்கும் சக்தி நீதான்
இருக்கும் போதும் தெய்வம் நீதான்
இறந்த பின்னும் தெய்வம் நீதான்

Post a Comment

0 Comments