Green Tamil - You Tube & Greentamil.in Website - சென்னை கூத்துப்பட்டறை இணைந்து வழங்கிய
ஆற்றல் ஆசிரியர் விருது விழா - 2023
கிரீன்தமிழ் யுடியூப் மற்றும் சென்னை கூத்துப் பட்டறை இணைந்து வழங்கிய ' ஆற்றல் ஆசிரியர் விருது ' விழா மதுரை ஆண்டார் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று ( 01 - 09 - 2023 ) நடைபெற்றது. விழாவிற்கு இராணுவ அலுவலர் கஜேந்திரன் (பணிநிறைவு ) தலைமை தாங்க , ஊராட்சி மன்றத் தலைவர் சீமான் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் மகேந்திர பாபு வரவேற்றார். சென்னை கூத்துப்பட்டறையின் நடிகை சுபத்ரா வரவேற்பு நடனம் ஆடினார்.
சிறப்பாகப் பணிபுரியும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பத்துப்பேர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராகப் பெரும்புலவர் சன்னாசி கலந்து கொண்டு ' ஆற்றல் ஆசிரியர் ' விருதினையும் , பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். பட்டிமன்ற நடுவர் கவிஞர் மூரா , அக்ரி ஆறுமுகம் , தமிழாசிரியர் மீனாட்சி சுந்தரம் , நாகேந்திரன் , காரை கிருஷ்ணா , முத்துராசா , லட்சுமி , தென்கரை முத்துப்பிள்ளை , பொறியாளர் வரதராஜன் , பேரா.கரு.முருகேசன் வாழ்த்தினார்கள். ஆண்டார் கொட்டாரம் பள்ளித் தலைமையாசிரியர் முனியாண்டி விருதாளர்கள் சார்பில் ஏற்புரை வழங்கினார். விருதாளர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. கூத்துப்பட்டறை பயிற்சி மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.சென்னை கூத்துப்பட்டறை நிறுவுநர் முத்துச்சாமி நன்றி கூறினார்.
0 Comments