சந்திரனைத் தொட்டு சாதனை படைத்த சந்திராயன்.!
23.08.2023
உள்ளம் மகிழ...
உலகநாடுகள் வியக்க
இந்திய வானில் ஒரு சரித்திர சாதனை
சோதனை பல கண்டு
சாதனைச் சிகரம்தொட்டு - இன்று
சான்றாக நிலைக்கிறது இந்திய விண்வெளி...!
ஆய்வுவழி தொழில்நுட்பத்தில்
ஆளில்லா நிலாப் பயணக்கலனை
தனித்தே கணித்து , வடித்து..
உருவாக்கி தரமூட்டி உலகறிய உயர்த்தி
ஏவூர்தியின் துணைகொண்டு
திங்களின் தென்முனையில்
தன் பாதம் பதித்தது .
இந்தியப் பொருள்தன்னை
நிலவில் விதைத்தது-உலக
சாதனைப் பட்டியலில்
நான்காம் இடத்தை நிறைத்தது.
புகழ் வானில்
இமாலயப் புதுமை படைத்தது ....!
சூரியக்கதிர் தொடாத தென்துருவத்தை
தன் கரத்தால் வருடி
ஆராயும் அறிவியல் வளர்ச்சி
இந்திய அறிவியலாளர்களின் முயற்சி ...
கனவு நாயகனின் வல்லரசாக மலர்ச்சி
சந்திராயன் சந்திரனில்
பாதம் பதித்த தருணம்.
இந்திய மனங்களின் மகிழ்வு
எல்லை கடந்த விரிவு...!
அற்புதம் படைத்த அறிவார்ந்த
கரங்களை
சொற்பூக்களால் அலங்கரித்து
மகிழ்வோம்!...!
பெரும் சாதனை படைத்த இஸ்ரோ
அறிவியலாளர்கள் மற்றும்
பணியாளர்களை
இரு கரம்கொண்டு வணங்கி
சிரம்லதாழ்ந்து மகிழ்வோம்.!!
இந்தியனாக, தமிழனாக
பெருமிதம்கொள்வோம்!
வாழ்த்துகளுடன் - Greentamil.in
வாழ்க இந்தியா! வளர்க அறிவியல்!!
0 Comments