10 - ஆம் வகுப்பு - தமிழ்
மாதத் தேர்வு - ஆகஸ்டு - 2023
மதுரை மாவட்டம் - 30 - 08 -2023
காலம் : 1:30 மணி மதிப்பெண்கள் : 50
பகுதி - I (மதிப்பெண்கள் -6)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1 ) 'உனதருளே பார்ப்பன் அடியேனே' - யாரீடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்
ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி
ஆ) நோயாளியிடம் மருத்துவர்
விடை : ஆ ) இறைவனிடம் குலசேகராழ்வார்
2 ) 'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது.
ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
இ) பக்தி இலக்கிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
விடை : அ ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது
இ ) ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர்
அ) இலா ஆ) பெப்பர் இ ) லிசா ஈ ) வாட்சன்
4 ) ‘குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்' - இத்தொடரில் இடம் பெற்றுள்ள வழுவமைதி
ஆ) இட வழுவமைதி
அ) பால் வழுவமைதி
இ கால வழுவமைதி
ஈ) மரபு வழுவமைதி
பாடலைப் படித்து விடை தருக.
"அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை"
5 ) இவ்வடி இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) நீதிவெண்பா ஆ) வெற்றி வேற்கை
இ ) பெருமாள் திருமொழிஈ) பரிபாடல்
விடை : அ ) நீதி வெண்பா
6 ) ' மருள்' என்பதன் பொருள்
அ) கல்வி ஆ) மயக்கம் இ ) தெளிவு ஈ அறிவு
விடை : ஆ ) மயக்கம்
பகுதி - 2 (மதிப்பெண்கள் - 12)
(பிரிவு - I )
குறுகிய விடை தருக. (மூன்று மட்டும்).
7 ) விடைக்கேற்ற வினா அமைக்க,
அ) இனிமேல் உலகைச் செயற்கை நுண்ணறிவு தான் ஆளகப்போகிறது.
விடை : இனிமேல் உலகை ஆளப்போவது எது ?
ஆ) பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
விடை : எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று எது ?
8 ) மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
நோயாளிக்கு மருத்துவரின் அன்பான பேச்சும் , அவர் அளிக்கும் நம்பிக்கையும் முக்கியமானது. மருந்துக்கு முன் நம்பிக்கையே பாதி நோயைக் குணப்படுத்தும்.
9 ) ' மொழிபெயர்ப்பு' - குறிப்பு வரைக.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு
10 ) வினாவின் வகைகளை எழுதுக.
வினா ஆறு வகைப்படும். அவை
1 ) அறி வினா
2 ) அறியா வினா
3 ) ஐயவினா
4 ) கொளல் வினா
5 ) கொடை வினா
6 ) ஏவல் வினா
பிரிவு - 2
விடை தருக. (மூன்று மட்டும்).
11 ) இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடரில் அமைக்க.
அ) இயற்கை - செயற்கை
இயற்கையை அழித்து செயற்கையாக வாழ முடியாது.
ஆ) விதி - வீதி
விதியற்றவனுக்கு வீதியே உலகம்.
12 ) தொடரில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ ) கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
விடை : முறையான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.
ஆ ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
விடை : பசுமையான மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.
13 ) கலைச்சொற்களைத் தமிழில் எழுதுக.
அ ) Bio Technology - உயிரித் தொழில்நுட்பம்
ஆ ) Emblem - சின்னம்
14 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக.
கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ
கிளர் - பகுதி
த் - சந்தி
த் (ந்) - ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி.
பகுதி - 3 ( மதிப்பெண்கள் - 09 )
சுருக்கமான விடை தருக. ( மூன்று மட்டும் ) . வினா எண். 18 கட்டாய வினா.
15 ) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
* பயணம் எளிதாகிறது.
*தகவல் தொடர்பு எளிதாகிறது.
* நோய்கள் விரைவில் குணமாகிறது.
* இயந்திர மனிதனால் வேலை எளிதாகிறது.
16 ) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியாமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ?
* வேலைக்குச் செல்வதால் படிப்புப் பாதிக்கப்படும்.
* படிப்பே மதிப்பைத் தரும்.
* கல்வி உயர்வைத் தரும்.
* படிப்பு எல்லா நலமும் தரும்.
17 ) முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
- இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
* ஆற்றுநீர்ப் பொருள்கோள்
* முயற்சி செல்வத்தைத் தரும். முயற்சியின்மை வறுமையைத் தரும்.
* ஆற்று நீரின் போக்கைப்போலப் பொருள் கொள்ளப்படுகிறது.
18 ) ' வாளால் அறுத்து ' எனத்தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே .
- குலசேகராழ்வார்.
பகுதி - 4 ( மதிப்பெண்கள் - 15 )
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
19 ) இறைவன் , புலவர் இடைக்காடனார் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
* குசேல பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப்புலமையில் சிறந்து விளங்கினான்.
* கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னனின் முன்பு பாடினார்.
* மன்னன் புலவரை அவமதித்தான்.
* புலவர் இறைவனிடம் முறையிட , இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.
* இதை அறிந்த மன்னன் , இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.
* இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.
20 ) பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.
மாணவர்களின் விடைக்கேற்ப மதிப்பெண் வழங்கலாம்.
21 ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
மாணவர்களின் படைப்பிற்கேற்ப மதிப்பெண் வழங்கலாம்.
22 ) படிவத்தை நிரப்புக. ( ம.தேன்மொழி , த/பெ.மணிமாறன் , 42 வடக்குரத வீதி , சிம்மக்கல் , மதுரை - 625 001 - என்ற முகவரியைத் தனதாகக் கொண்டு படிவத்தை நிரப்புக.
மாணவர்ளின விடைகளுக்கேற்ப மதிப்பெண் வழங்கலாம்.
பகுதி - 5 ( மதிப்பெண்கள் - 8 )
விரிவான விடை தருக.
23 ) அ . ' கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
( அல்லது )
ஆ ) கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு ' விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் ' என்ற கட்டுரை எழுதக.
( பிறப்பு - இளமையும் கல்வியும் - சாதனைகள் - விருதுகள் )
**************** ************* ************
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் ,
இளமனூர் , மதுரை.
**************** ************** ***********
0 Comments