கர்மவீரர் காமராசர் - பிறந்தநாள் சிறப்புக் கவிதை / karmaveerar kamarasar birth day kavithai

 

கர்மவீரர் காமராசர் - பிறந்தநாள் 

சிறப்புக் கவிதை


*மாமேதை


தும்பைப் பூ வேட்டிக்காரர் 

தூய உள்ளத்து கெட்டிக்காரர்

விருதுநகரில் விளைந்த முத்து !

 நீர்தான் தமிழகத்தின் சொத்து !


படிக்காத மேதையாம் 

ஊரெல்லாம் பேச்சு!

நான் கூறுகிறேன் 

நீர் தான் படித்த மாமேதை !


மாணவர் மனதைப் படித்த மாமேதை

அறிவுப் பசியோடு 

வயிற்றுப் பசியும் 

போக்கிய மாமேதையே!


எண்ணிய வண்ணம் 

செய்து முடிக்கும் கர்மவீரரே  !

எங்கள் காமராஜரே !


'கல்வி சிறந்த தமிழ்நாடு' - 

புகழைப் பெற்றுத் தந்தவரே !

பாகுபாடின்றிப் பள்ளி செல்ல

பள்ளிச்சீருடை தந்தவரே !


ஊரெல்லாம் பேச்சு படிக்காத மேதை ...


உழவின்றி உலகில்லை... 

உண்மை அறிந்த மாமேதையே!

ஊரெல்லாம் அணைகள் கட்டி

உழவுத் தொழிலுக்கு 

வந்தனை செய்தவரே !

நீர் தான் மாமேதை !

பார்போற்றும் மாமேதை📚📚📚📚



கவிஞர்.ம.தன்சியா , 

தமிழ் ஆசிரியர் , 

 நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொள்ளாச்சி

Post a Comment

0 Comments