தமிழ் மொழியின் சிறப்புகள்

 


தமிழ் மொழியின் சிறப்புகள்

1) தமிழ் மொழி இனிமையானது ஏன் ?


       மனத்திற்கு இன்பம் தருவது , செவிக்கு இன்பம் தருவது , பேசுவதால் வாய்க்கு இன்பம் தருவது. அனைத்துப் புலன்களுக்கும் இன்பம் தருகின்ற சொற்களைக் கொண்ட மொழியாக இருப்பதால் தமிழ் மொழி இனிமையானது.


2 ) தமிழ் மொழியை ஏன் அமுதத் தமிழ்  என்கிறோம் ?


       தேவாமிர்தம் உண்ட தேவர்கள் என்றும் இறவாநிலை பெறுவர் என்பது புராண மரபுச்செய்தி. இத்தேவர்களைப் போலவே தமிழ் மொழியைக் கற்றறிந்த அறிஞர்கள் என்றும் நிலைத்த புகழைப் பெறுவர். அதனால் தமிழ்மொழியை அமுதத் தமிழ் என்கிறோம்.


3 ) தமிழ் மொழியைப் பைந்தமிழ்  என்று ஏன் கூறுகிறோம் ?


      பசுமை + தமிழ் = பைந்தமிழ். பசுமை என்பது செழிப்பின் அடையாளம். தமிழ் , உலக மொழிகளில் செழுமையான மொழி. அதனால் பைந்தமிழ் என்கிறோம்.


4 ) தமிழின் தொன்மைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக .


               * தமிழ் மொழி இயற்கையாகத் தோன்றிய மொழி. தோற்றுவித்தவர் யாரும் இல்லை.


             * மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கிய , இலக்கணங்களைக் கொண்டது.


5 ) தமிழ் மொழியை வளர்க்க ஏதேனும் இரண்டு வழிமுறைகளைக் கூறுக .


         * தமிழ் மொழியில் உள்ள நூல்களை உலக மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும்.


         * பிற நூல்களைத் தமிழ் மொழியில் மொழிபெயர்க்க வேண்டும்.


*பெரும்புலவர்.திரு.மு.சன்னாசி அவர்கள்*

Post a Comment

0 Comments