பா நயம் - மொழியை ஆள்வோம் - பாடப்பகுதிப் பாடலும் பொருளும் / 10th tamil - eyal 1 - mozhiyai aalvom

 


மொழியை ஆள்வோம் 

 பத்தாம் வகுப்பு - தமிழ்

பா நயம் 


ஒரு மன்னர் புலவர் ஒருவரிடம் மிகுந்த அன்பு செலுத்தி வந்தார். ஒரு நாள் புலவரையும் அழைத்துக் கொண்டு வேட்டைக்குச் சென்றார். மன்னர் குதிரை மீது ஏறி அமர்ந்தார். அவர் கையில் வேல் ஒன்று இருந்தது . காட்டிற்குள் செல்லும்போது மன்னர் புலி ஒன்றைக் கண்டார். தன் கைவேலை வீசி புலியை வீழ்த்திக் கொன்றார். மேலும் பல விலங்குகளையும் வேட்டையாடி விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.


 வேட்டையாடி விட்டு நலமுடன் மன்னர் அரண்மனைக்கு திரும்பியதால் அரண்மனை பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மன்னர் அவைக்குச் சென்றார். தன் அன்பிற்குரிய புலவரைப் பார்த்து ,  " புலவரே ! எனது வேட்டைப் போக்கு எப்படி இருந்தது ? " என்று கேட்டார்


அதற்குப் புலவர் , " மன்னர் பெருமானே ! ஒரு மரம் மரத்தில் ஏறி ,  ஒரு மரத்தைத் தோளில் எடுத்து மரங்கள் மிகுந்த இடத்திற்குச் சென்றது. அங்கு ஒரு மரத்தைக் கண்டது . கையில் இருந்த மரத்தினால் மரத்தை குத்திக் கொன்றுவிட்டு மரமானது மீண்டும் தன் இருப்பிடத்திற்குச் சென்றது. மரத்தைக் கண்ட பெண்கள் இரு மரங்களை கையிலே தூக்கினார்கள் " என்று கூறி முடித்தார்.


புலவர் மரம் மரம் என்று என்னென்னவோ கூறியது மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை. புலவரிடம் " தாங்கள் கூறியதன் விளக்கம் என்ன  ?" என்று கேட்டார். அதற்குப் புலவர். அரசே ! அரசராகிய தாங்கள் அரசமரம் ஆவீர்கள் . அரச மரமாகிய நீங்கள் குதிரை  மீதேறி சென்றீர்கள் அல்லவா ?  குதிரை மா  என்று பெயர் பெறும். எனவே குதிரையை மா மரம் என்று பொருள் செய்து ஒரு மரம் மற்றொரு மரத்தில் ஏறியதாகக்  கூறினேன் . வேற்படை' ' வேல் ' கூறப்படும் .வேல் என்ற வேலமரம் இருப்பதை தாங்கள் அறிவீர்கள் . 'மரத்தை தோலில் வைத்து என்றேன்


    வனத்திற்குச் சென்றவுடன் புலியைக் கண்டு அதனைக் கொன்று  வீழ்த்தீனீர்கள். புலி ' வேங்கை என்றும் பெயர் .பெரும் வேங்கை மரம் என்று ஒருவகை இருப்பதை அறிவீர்கள். ஏஅதனால் மரம் மரத்தால் மரத்தை குத்திக் கொன்றது என்றேன்.


தாங்கள் அரண்மனைக்குத் திரும்பியதும் பெண்கள் திருஷ்டி கழிக்க ஆரத்தி எடுத்தார்கள் அல்லவா ?  அதனை ,, 

' ஆல் அத்தி என்றேன். நஅந்தப் பெயர்களின் உள்ள மரங்களை தங்களுக்குத் தெரியும். ஆகவே இரண்டு மரங்களையும் கையில் தூக்கினார்கள் " 

என்று தெரிவித்தார்.


பொருள் செறிந்த புலவரின் உரையைக் கேட்டுப் புரவலர் பேருவகை அடைந்தார் அவையோரும் புலவரின் நாணயம் கண்டு வியந்தனர். 


மன்னரைப்  பாராட்டிப் புலவர் பாடிய பாடல் இதோ  ...


" மரமது மரத்தி லேறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக் கண்டு மரத்தினான் மரத்தைக் குத்தி

மரமது வழியே சென்று வளமனைக் கேகும்போது

மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெ டுத்தார். "

Post a Comment

0 Comments