எட்டாம் வகுப்பு - தமிழ்
இயல் 1 , கவிதைப் பேழை
தமிழ் மொழி வாழ்த்து - மகாகவி பாரதியார்.
இயங்கலை தேர்வு வினாக்களும் விடைகளும்
1) மகாகவி பாரதியார் பிறந்த ஊர் ------
அ ) எட்டயபுரம்
ஆ ) பொன்னையாபுரம்
இ ) தூத்துக்குடி
ஈ ) திருநெல்வேலி
விடை : அ ) எட்டயபுரம்
2 ) சிந்துக்குத் தந்தை என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் -----
அ ) சுரதா
ஆ ) கண்ணதாசன்
இ ) பாரதிதாசன்
ஈ ) வாணிதாசன்
விடை : இ ) பாரதிதாசன்
3 ) தமிழ் மொழி வாழ்த்து ------- என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
அ ) பாப்பா பாட்டு
ஆ ) கண்ணன் பாட்டு
இ ) குயில் பாட்டு
ஈ ) பாரதியார் கவிதைகள்
விடை : ஈ ) பாரதியார் கவிதைகள்
4 ) மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் --------
அ ) வைப்பு
ஆ ) கடல்
இ ) பரவை
ஈ ) ஆழி
விடை : அ ) வைப்பு
5 ) வானம் + அறிந்த என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ------
அ ) வானம் அறிந்து
ஆ ) வான் அறிந்த
இ ) வானமறிந்த
ஈ ) வான் மறிந்த
விடை : இ ) வானமறிந்த
6 ) ' வானமளந்தது ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ ) வான + மளந்தது
ஆ ) வான் + அளந்தது
இ ) வானம் + அளந்தது
ஈ ) வான் + மளந்தது
விடை : இ ) வானம் + அளந்தது
7 ) ------ கருத்தை அறிவிக்கும் கருவி
அ ) நாடு
ஆ ) மாநிலம்
இ ) மொழி
ஈ ) மதம்
விடை : இ ) மொழி
8 ) தமிழர்கள் தம் தாய்மொழியாகிய தமிழை ------- எனக் கருதிப் போற்றி வந்துள்ளனர்.
அ ) அறிவு
ஆ ) செல்வம்
இ ) வீரம்
ஈ ) உயிர்
விடை : ஈ ) உயிர்
9 ) ------ அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே !
அ ) கடல்
ஆ ) பூமி
இ ) நாடு
ஈ ) வானம்
விடை : ஈ ) வானம்
10 ) ' இசை ' என்பதன் பொருள்-----
அ ) நிழல்
ஆ ) புகழ்
இ ) பொறுமை
ஈ ) சிறுமை
விடை : ஆ ) புகழ்
11 ) ------ வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே
அ ) ஐநிலம்
ஆ ) ஏழ்மலை
இ ) ஏழ்நதி
ஈ ) ஏழ்கடல்
விடை : ஈ ) ஏழ்கடல்
12 ) ----- நீங்கத் தமிழ் மொழி ஓங்கத் துலங்குக வையகமே
அ ) சூழ்கடல்
ஆ ) ஆர்கழி
இ ) சூழ்கலி
ஈ ) விரிகடல்
விடை : இ ) சூழ்கலி
13 ) வானமளந்த தனைத்தும் அளந்திடு ------ வாழியவே.
அ ) வண்மொழி
ஆ ) தென்மொழி
இ ) பண்மொழி
ஈ ) செம்மொழி
விடை : அ ) வண்மொழி
14 ) தொல்லை வினைதரு தொல்லை அகன்று சுடர்க ------
அ ) தெலுங்கு நாடு
ஆ ) கர்நாடகா
இ ) கேரளம்
ஈ ) தமிழ்நாடு
விடை : ஈ ) தமிழ்நாடு
15 ) ஜெயா என்ற இதழை நடத்தியவர் ------
அ ) பாரதிதாசன்
ஆ ) பாரதியார்
இ ) சுரதா
ஈ ) கண்ணதாசன்
விடை : ஆ ) பாரதியார்
16 ) வண்மொழி என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------
அ ) வண் + மொழி
ஆ ) வண்மை + மொழி
இ ) வளமை + மொழி
ஈ ) வாண் + மொழி
விடை : ஆ ) வண்மை + மொழி
17 ) சீட்டு + கவி என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ ) சீட்டுகவி
ஆ ) சீட்டுக்கவி
இ ) சீடைக்கவி
ஈ ) சீட்கவி
விடை : ஆ ) சீட்டுக்கவி
18 ) பாரதி வாழ்ந்த ஆண்டுகள் ------
அ ) 29
ஆ ) 39
இ ) 49
ஈ ) 59
விடை : 39
19 ) பழமை மற்றும் துன்பம் என்ற சொல்லின் பொருள் ------
அ ) புகழ்
ஆ ) வைப்பு
இ ) பரவை
ஈ ) தொல்லை
விடை : ஈ ) தொல்லை
20 ) பாரதியார் தமிழாசிரியராகப் பணிபுரிந்த ஊர் ------
அ ) திருநெல்வேலி
ஆ ) தூத்துக்குடி
இ ) பாண்டிச்சேரி
ஈ ) மதுரை
விடை : ஈ ) மதுரை
**************** *********** ***********
வினா உருவாக்கம்
மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
***************** ************ **********
0 Comments