குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் - சிறப்புக் கவிதை ( ஜூன் 12 )
*குழந்தைத் தொழிலாளி*
பட்டுப்பூச்சியாய்ப்🦋 பறக்காமல்
கூட்டுப்புழுவாய்🐛 குறுகிப் போனாய்
குட்டிக் கையில் பேனா பிடிக்காமல்
கூனிக்குறுகி கூலி வாங்குகிறாய்
புத்தகப்பை🎒 சுமக்காமல்
குடும்ப பாரம் சுமக்கிறாய் !
கிளியாய்ப் பேசி🦜
குயிலாய்ப் பாடி🐦⬛
மானாய்த் துள்ளாமல் 🦌
மாநகரெங்கும் உழைத்துத் தேய்கிறாய்.
உன் இரவு எப்படிக் கழியும் எண்ணிப்பார்க்கிறேன் நான் 🤔
நீயோ,
எண்ணி எண்ணிப் பார்க்ககிறாய்
பகல் உழைப்பின்
மிச்சக் காசுகளை !
பிஞ்சு விரல்கள்
பஞ்சம் பிழைக்கக் கல்லுடைத்துக் காய்ச்சுப் போகிறது🥺
நேருமாமா இன்றிருந்தால்
நெஞ்சுருகிப் போவார்😢.
உன் கனவுகள்
பட்டாசுத் தொழிற் சாலையிலும்
தீப்பெட்டித் தொழிற்சாலையிலும் கருகிப்போகின்றன😔
அறிந்துகொள்
உன் வயிற்றுப் பசிக்கும்
அறிவுப் பசிக்கும் உணவூட்ட அன்னையாய் அரசுப் பள்ளிகள் உண்டு.
உன் கனவுப் பூக்களின் பூங்காவாய் அரசுப் பள்ளிகள் உண்டு🌳🌴🌲🎄🌿
பூங்காவின் தோட்டக்காரராய்
ஆசிரிய அம்மாக்களும்
அன்புகாட்டும் அப்பாக்களும் காத்திருக்கிறோம் உனக்காக !
நலத்திட்டங்கள் ஏராளமாய்
பயன்பெறலாம் நீ தாராளமாய்📚📖📐📏🖋️🖊️📝✏️👩🏻🎓🧑🏻🎓
இன்றே மாணவ அவதாரமெடு !
கவிஞர்.ம.தன்சியா ,
முதுகலைத் தமிழாசிரியர்,
நகரவை(பெ)மேல்நிலைப்பள்ளி,
பொள்ளாச்சி.
0 Comments