போட்டி போடலாம் வாங்க ! - பாடல்

 


போட்டி போடலாம் வாங்க - பாடல்

போட்டி போடலாம் வாங்க !


போட்டி போடலாம் வாங்க !

நமக்குள்ள போட்டி போடலாம் வாங்க !


அறிவை வளர்க்கனும்

அதோடு அன்பையும் வளர்க்கனும்

நட்பை வளர்க்கனும் 

நாளும் நன்றாய் உயர்ந்திடவே -  போட்டி 

மனப்பான்மையை வளர்க்கனும் !


வகுப்பில் முதல் மதிப்பெண் 

நான்தானு போட்டி போடனும்

ஆசிரியர் சொல்லும் கட்டளையை உடனே  முடிப்பேன்

வீட்டுப் பாடம் என்றாலே 

உடனே படிப்பேன்

பேச்சா எழுத்தா விளையாட்டா 

எல்லாமும் நான்தான் எனபோட்டி போடலாம் வாங்க!


போட்டியும் உண்டு பொறாமையும் உண்டு !

வெற்றி பெற்றா வாழ்த்தவும் செய்வோம் !

அவர் வெற்றிக்குத் தலை வணங்கவும் செய்வோம் !

குறையைக் களைந்து நிறைவைத் தந்திட 


போட்டி போடலாம் வாங்க !


வாழ்வில் உயரம் அடைந்திட

வளமை நம்மில் நிறைந்திட

ஆக்கம் நம்மில் தோன்றிட 

தூக்கம் நம்மில் அகன்றிட

போட்டி போடலாம் வாங்க!

நல்லா போட்டி போடலாம் வாங்க !

Post a Comment

0 Comments