உலக புத்தக தினம் ( 23 - 04 - 2023 )
சிறப்புக் கவிதை - கவிஞர்.இந்திரா விஜயலட்சுமி.
எந்நேரம் என்ற போதும் வாஞ்சையாய்
அரவணைக்கும் அன்னை மடி.
அறிவைச் சலவை செய்து செய்து
மெருகேற்றும் புனித நதி.
கண்ணீர்த் துளிகள் கன்னம் தாண்டிடும் முன்
துடைக்கின்ற மாய விரல்.
ஓர் இடத்திலிருந்த படியே உலகையே
வலம் வரச்செய்யும் மாய எந்திரம்.
துன்பம் மிகும் நேரங்களில்
தோள் கொடுக்கும் உற்ற தோழி.
மூன்றாவது கண் திறக்கச்செய்து
பிரபஞ்ச ரகசியம் வரை காட்டும் சாளரம்.
ஒரு நொடியில் அனைத்தையும்
மறக்கச் செய்யும் வலி நிவாரணி.
ஒரு போதும் துரோகம் அறிந்திடா
என் வாழ்நாள் காதலன் ❤️
புத்தகம்... ❤
உலக புத்தகதின வாழ்த்துக்கள்.
0 Comments