திருவண்ணாமலை தீபத் திருவிழா
06 • 12 •2022
1. ஆதியும்,அந்தமும் இல்லாத அருட் பெரும் ஜோதியாய்
இறைவன் காட்சி தந்த நாளே ---------- .
அ. ஆருத்ரா தரிசனம்
ஆ.சிவராத்திரி
இ. கார்த்திகை விளக்கீடு
ஈ .தைப்பூசம்
2• கார்த்திகை தீபம் ஏற்றும் மலையானது------ அடி உயரம்
கொண்டது.
அ.2668 அடி
ஆ.1500-அடி
இ.1300-அடி
ஈ .2700- அடி
3. -------- க்கும், ------ க்கும் இறைவன் ஜோதி பிழம்பாக காட்சி
அளித்தார்.
அ.விஷ்ணு,பிரம்மா.
ஆ.முருகன், விநாயகர்
இ.பிரம்மா,சிவன்
ஈ.விஷ்ணு, சுப்பிரமணியர்
4.கார்த்திகை மாதத்தில் தமிழர்கள் ----- தீபம் ஏற்றுவர்.
அ.27
ஆ.12
இ.24
ஈ. 38
5.சிவன் ஜோதி வடிவமாக காட்சி அளித்த நாள் ---- ஆகும்
அ.திருக்கார்த்திகை நிறைமதி
ஆ.மாசிமகம்
இ.சித்ரா பெளர்ணமி
ஈ.கிருத்திகை
6. பண்டைத் தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை ------
நாள்மீன் பெயர்களில் வழங்கி வந்தனர்.
அ.27 - நாள்மீன்
ஆ.48 - நாள்மீன்
இ.87 - நாள்மீன்
ஈ.67 - நாள்மீன்
7. -------- பூ மிகுதியாக மலரும் காலமே கார்த்திகை மாதம் .
அ.காந்தள்
ஆ.பிடவம்
இ.அனிச்சம்
ஈ.முல்லை
8.மகாதீபம் இலக்கியங்களில்-------- தீபம் என
அழைக்கப்படுகின்றன.
அ.சர்வாலய தீபம்
ஆ.பரணி தீபம்
இ.வைகானச தீபம்
ஈ.பாஞ்சராத் தீபம்
9.கார்த்திகை தீபம் ஏற்றும் கொப்பரை------ , ------ கொண்டு
தயாரிக்கப்பட்டவை.
அ.செம்பு, இரும்பு
ஆ.தங்கம்,செம்பு
இ.வெங்கலம், இரும்பு
ஈ. அலுமினியம்,இரும்பு
10. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்றப்படும் தீபம் ---- .
அ.இலட்ச தீபம்
ஆ.பரணி தீபம்
இ.வைகானச தீபம்
ஈ. கார்த்திகை தீபம்
11."மலையில் பனி பொழிந்த கார்த்திகை மாதத்தில் அவன்
முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான் "என தீப
ஒளியின் பெருமையைப் பேசும் நூல் எது ?
அ.மதுரைக் காஞ்சி
ஆ.நற்றிணை
இ.நாலடியார்
ஈ.குறுந்தொகை
12." கார்த்திகை காதில் கனமகர குண்டலம் போல் சீர்த்து
விளங்கித் திருப்பூதல் " என கார்த்திகையின் சிறப்புக்
கூறும் நூல் -----?
அ.பரிபாடல் திரட்டு
ஆ.திருக்குறள்
இ.புறநானூறு
ஈ.தனிப் பாடல் திரட்டு
13.பூமியில் சுடர்விடும் ஒரே தீபம் என ஒளித்தருவது------.
அ.நட்சத்திரம்
ஆ.சூரியன்
இ.நிலா
ஈ.வெள்ளி
14.கார்த்திகை தீபம் என்பது ஒரு------ குறியீடு .
அ.ஆன்ம விடியல்
ஆ.ஒளிக் குறியீடு
இ.மழைக்குறியீடு
ஈ.மலைக்குறியீடு.
15.திருவண்ணாமலை தலதீப தரிசனம் கண்டவர்கள் ------
தலைமுறை முக்தி அடைவர் என்பது நம்பிக்கையாகும்.
அ.21
ஆ.100
இ.50
ஈ.75
16.ஞானமலை எனப் புகழப்படும் மலை -------- .
அ.திருத்தணிகை மலை
ஆ.திருவண்ணாமலை
இ.திருப்பரங்குன்றம்
ஈ. திருக்கயிலை மலை
17. திருவண்ணாமலையில் காலையில் ------ தீபமும்,மாலையி
ல் --------- , தீபமும் ஏற்றப்படுகிறது.
அ. பரணி, திருக்கார்த்திகை
ஆ.ருத்ர தீபம், பரணி
இ.இலட்ச தீபம், திருக்கார்த்திகை
ஈ. வைகானச தீபம், பாஞ்சராத்திர தீபம்
18. " இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் " - எனக்
கூறியவர் யார் ?
அ. ஆழ்வார்
ஆ.அப்பர்
இ.ஆண்டாள்
ஈ.மாணிக்கவாசகர்
19. மகாதீபம் தொடர்ந்து எத்தனை நாட்கள் எரியும் ?
அ.11- நாட்கள்
ஆ.12 - நாட்கள்
இ. 27 -நாட்கள்
ஈ. 108 - நாட்கள்
20. திருக்கார்த்திகை நாளில் இறைவன் வேட்டைக்கு எழுந்த
ருளுவததைப் பற்றிய செய்திகளை------- கல் வெட்டு
கூறுகின்றது.
அ.முதலாம் ராஜேந்திரச் சோழன்
ஆ.மகேந்திர வர்மப் பல்லவன்
இ.சேரன் செங்குட்டுவன்
ஈ. நரசிம்ம வர்மன்
21.திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் உரிமையைப்
பெற்றவர்கள் ------
அ.பர்வத ராஜ குலத்தினர்
ஆ.பாண்டியர்கள்
இ. சம்பூவராயர்கள்
ஈ.களப்பிரர்கள்.
22.நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபட ------- பெருகும்.
அ.ஆரோக்கியம்
ஆ.கல்வி
இ. செல்வம்
ஈ. ஆயுள்
23. அழியாப் புகழினைப் பெற எந்த எண்ணெய் தீபம்
ஏற்ற வேண்டும்?
அ.விளக்கெண்ணெய் தீபம்
ஆ.தேங்காய் எண்ணெய்
இ. எள் எண்ணெய்
ஈ. புங்க எண்ணெய்
24. கார்த்திகை மாதம் கோயில் மற்றும் வீடுகளில்பிரசாசமா
ன விளக்கேற்றி கொண்டாடுவதற்கு ------ என்று பெயர்.
அ . கார்த்திகை விளக்கீடு
ஆ.தீபாவளி பண்டிகை
இ.இலட்சத் திருவிழா
ஈ குலதெய்வ வழிபாடு
விடைகள்
1. கார்த்திகை விளக்கீடு
2. 2668 - அடி
3. விஷ்ணு,பிரம்மா
4.27
5. திருக்கார்த்திகை நிறைமதி(பெளர்ணமி)
6. 27 நாள்மீன்
7. காந்தள் பூ
8. சர்வாலய தீபம்
9. செம்பு, இரும்பு
10. இலட்ச தீபம்
11. நற்றிணை
12.பரிபாடல் திரட்டு
13. சூரியன்
14. ஆன்ம விடியல்
15. 21
16. திருவண்ணாமலை
17. பரணி, திருக்கார்த்திகை
18. ஆழ்வார்
19. 11- நாட்கள்
20. முதலாம் ராஜேந்திர சோழன்
21. பர்வத ராஜ குலத்தினர்
22. ஆரோக்கியம்
23. விளக்கெண்ணெய் தீபம்
24. கார்த்திகை விளக்கீடு.
0 Comments