எங்கள் தேசம் - சிறுவர் பாடல்

 


எங்கள் தேசம் - சிறுவர் பாடல்

பசுமைக்கவிஞர்.மு.மகேந்திர பாபு


உலகம் போற்றும் தேசம்

எங்கள் இந்திய தேசம்

நாட்டின் மேலே பாசம்

தென்றல் காற்றாய் வீசும்


புத்தொளி பறக்கும் கொடிதான்

புரட்சிகள் செய்திட்ட கொடிதான்

தாமரை மலர்களைப் போல

முகம் மலர்ந்தே சிரித்திடுவோமே !


தேசம் எங்கள் உயிராகும்

தேசிய கீதம் உணர்வாகும்

அசோகத் ஸ்தூபி சின்னம்தான்

அதிலே இருக்குது எண்ணம்தான்


மொழிகள் பலப்பல இருந்தாலும்

இனங்கள் பலப்பல இருந்தாலும்

இந்திய ரென்றே சொல்லிடுவோம் !

அன்பால் நாங்கள் வென்றிடுவோம் !


வீரமங்கை வேலு நாச்சி

மாவீரன் சுந்தர லிங்கம் என

தேசம் காத்த தலைவர்களை

தினமும் நாங்கள் நினைத்திடுவோம் !


காந்தியும் திலகரும் பகத்சிங்கும்

கப்ப லோட்டிய தமிழனும்

கொடியைக் காத்த குமரனும் 

எங்கள் மனதில் இருக்கின்றார் !


நல்லோர் செய்த தவத்தாலே

நாடு விடுதலை பெற்றதே !

நாங்கள் நாட்டின் கண்கள்தான்

நாட்டை வீட்டை நேசிப்போம் !

Post a Comment

0 Comments