10 தமிழ் மதுரை - இரண்டாம் இடைப்பருவத்தேர்வு

 

         10 - ஆம் வகுப்பு - தமிழ்


இரண்டாம் இடைப் பருவத் தேர்வு - 2022
மதுரை

காலம்: 1.30 மணி
                                  

                                 பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
குறியீட்டுடன் எழுதவும்.


1 ) இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவதன் காரணம் -----

அ ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ ) ஆநிரை கவர்தல்

இ ) வலிமையை நிலைநாட்டல்

ஈ ) கோட்டையை முற்றுகையிடல்

விடை : இ ) வலிமையை நிலைநாட்டல்


2. புதுக்கோட்டை என்ற ஊர்ப்பெயரின் மருஉவை எழுதுக.


அ) புதுவை


ஆ) புதுகோட்டை

இ ) புதுகை

ஈ ) புதுக்கோட்டை 

விடை : இ ) புதுகை

3. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா

ஆ) வெண்பா

இ) வஞ்சிப்பா

ஈ ) கலிப்பா

விடை : அ ) அகவற்பா

4. வண்ணமும், சுண்ணமும் இலக்கணக் குறிப்புத் தருக.

அ) உவமைத் தொகை

ஆ ) எண்ணும்மை


இ) உம்மைத்தொகை


ஈ) பண்புத்தொகை

விடை : ஆ ) எண்ணும்மை

பின்வரும் பாடலைப் படித்து 5.6.7 வினாக்களுக்கு விடையளிக்கவும்.


'பகர்வனர் திரிதரு நகரவீதியும்:
பட்டினும் மயிரினும் பருத்திநூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் 
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்


5 ) இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது ?

விடை : சிலப்பதிகாரம்


6 ) பாடலில் அமைந்துள்ள மோனையை எடுத்து எழுதுக.

பகர்வனர்

பட்டினும் 

பருத்திநூலினும்


7 ) காருகர்- பொருள் தருக.


விடை - நெய்பவர்

                                                  Greentamil.in


பகுதி - II (பிரிவு - 1)
எவையெனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும். 2 X 2 = 4

8 ) மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

* அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்.

* அழியாத வகையில் இருப்பதற்காகவே மெய்க்கீர்த்தி பாடப்பட்டது.


9 ) குறள் வெண்பாவின் இலக்கணம் யாது?

குறள் வெண்பாவின் இலக்கணம்:

(i )  வெண்பாவியின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.

(ii) முதலடி நான்கு சீராகவும் (அளவடி) இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

(எ.கா) : அறம் சாரா நல்குரவு ஈன்றதா யானும்

பிறன்போல நோக்கப் படும்.


10 ) வாழ்வில் தலைக்கனம், தலைக்கனமே வாழ்வு என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

வாழ்வில் தலைக்கனம்

                  ஒரு சில மனிதர்களுக்குப் புகழின் உச்சிக்குச் சென்றாலோ , சில சாதனைகள் புரிந்தாலோ , செல்வந்தரானாலோ அவர்களையும் அறியாமல் தலைக்கனம் வந்துவிடும்.பணம் , பட்டம் , பதவி , பொருள் இவற்றால் தலைக்கனம் வந்துவிடும்.

தலைக்கனமே வாழ்வு 

            எப்போதும் பசி , பட்டினி , வறுமை என்றிருக்கும் ஏழைத்தொழிலாளிகள் அவர்களின் தலையில் சுமையைத் தூக்கிச்செல்வதால் மட்டுமே வாழ்க்கை நடைபெறும்.சித்தாளு வாழ்வைப் பற்றிக்கூறுகிறார்.


11 ) குறிப்பு வரைக. அவையம்.

* அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

** அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்' என்று புறநானூறு கூறுகிறது.

*** உறையூரிலிருந்து அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன

***** மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது, அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று கூறுகிறது.


                              பிரிவு - 2


எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 2 × 2 = 4


12. வெட்சித்திணை என்றால் என்ன?

* மக்கள் சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில் , ஆநிரைகளை ( மாடுகளை ) சொத்தாகக் கருதினர்.ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழுவினர் ஆநிரைகளைக் கவர்தல் வழக்கமாக இருந்தது.

* ஆநிரை கவர்ந்துவர வெட்சிப் பூவினைச் சூடிக்கொண்டு செல்வர். எனவே , ஆநிரை கவர்தல் வெட்சித்திணை எனப்பட்டது.


13. வரப்போகிறேன், முன்னுக்குப்பின் என்ற தொடரைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.


14. கலைச்சொற்கள் தருக.
அ) Document - ஆவணம்

ஆ) Belief - நம்பிக்கை

15 ) பகுபத உறுப்பிலக்கணம் தருக :

மயங்கிய.

மயங்கு + இ ( ன் ) + ய் + அ

மயங்கு - பகுதி

இ ( ன் ) - இறந்தகால இடைநிலை ; ' ன் ' புணர்ந்து கெட்டது

ய் - உடம்படுமெய்

அ - பெயரெச்ச விகுதி

                     பகுதி - III

பின்வரும் வினாக்களுக்கு விடைதருக. வினா எண் 17 க்கு கட்டாயமாக  விடையளிக்கவும்.


16 ) ' தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்'
-இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

இத்தொடர்`சிற்றகல் ஒளி' என்னும் பாடத்தில் ம.பொ.சி. அவர்களால் சொல்லப்பட்டது. ஆந்திரமாநிலமும்   தமிழ்நாடும் பிரியுமுன் ம.பொ.சி. கூறியது.

விளக்கம் :

               ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகரமாக அமைய வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர். அந்நாள் முதல்வர் இராஜாஜி தலைநகர் காக்கத் தன் முதலமைச்சர் பதவியைத் துறந்தார். இதையொட்டி மாநகராட்சியின் சிறப்புக் கூட்டமொன்றை அப்போதைய மாநகரத்தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி, சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்தபோது,

“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று ம.பொ.சி. முழங்கினார். தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆந்திர அரசின் தலைநகரம் ஆந்திர நாட்டின் எல்லைக்குள்ளேயே   அமைந்தது. சென்னை தமிழருக்கே என்பது உறுதியானது.


17 ) அடிபிறழாமல் எழுதுக.
தூசும்துகிரும்
மறுக்கும்' என்ற பாடல்.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

18 ) ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் தருக. 

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் :

i ) ஓசை - அகவல் ஓசை பெற்று வரும்.

(ii) சீர் - ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

(iii) தளை - ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.

(iv) அடி - மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.

(v) முடிப்பு - ஏகாரத்தில் முடிதல் சிறப்பு.

 (அல்லது)


தீவக அணியின் வகைகள் யாவை?

தீவகம் என்ற சொல்லுக்கு விளக்கு என்று பொருள்.ஓர் அறையில் ஓர் இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தருவதுபோல செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் பல  இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்குவதால்  இது தீவகம் எனப்பட்டது.

தீவக அணி மூன்று வகைப்படும்.

1 ) முதல்நிலைத் தீவகம்

2 ) இடைநிலைத் தீவகம்

3 ) கடைநிலைத் தீவகம்
.........
23. நயம் பாராட்டுக.
பகுதி - IV
எவையெனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.
3× 4 = 12
மாணவன் கொக்கைப்போல். கோழியைப்போல் இருக்க வேண்டும் என்பதை உரையாடல் வடிவில் எழுதுங்கள்.

ஆசிரியர் : மாணவர்களே! இன்று எதைப் பற்றி விவாதம் நடைபெறுகிறது?

மாணவர்கள் :  நேற்று நூலகத்திற்குச் சென்றபோது கொக்கு, கோழி  ஆகியவற்றின் இயல்பைப் படித்தேன். அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஐயா.

ஆசிரியர் : அப்படியா! என்ன தெரிந்து கொண்டீர்கள்?

மாணவர்கள் :  கொக்கு, காத்திருந்தது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும். கோழி குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும். இவை போன்றே   மூன்றுவிதமான மாணவர்கள் உள்ளதாகவும் கூறுவார்களே அது எவ்வாறு?

ஆசிரியர் :  சரியாகச் சொன்னீர்கள். கொக்கு, ஒற்றைக்காலில் பொறுமையாக நின்று கொண்டு   தனக்குத் தேவையான மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுவிடும். அதுபோலவே மாணவர்கள் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி அரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். கோழி இது குப்பையைக் கிளறும். ஆனால் அந்தக் குப்பைகளை விட்டு விட்டு தனக்குத் தேவையான உணவை மட்டுமே எடுத்துக் கொள்ளும். அதுபோல மாணவர்களும் தமக்கு நேரும் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமைகளைப் புறந்தள்ளி நன்மைகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

20. உங்கள் தெருவில் பழுதடைந்துள்ள மின்விளக்குகளைச் சரி செய்யக் கூறி மின்வாரிய
அலுவலருக்குக் கடிதம் வரைக.
21. சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஐந்து முழக்கத் தொடர்கள் எழுதுக.
எண்.. 17க்கு
Greentamil.in
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்/
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
கட்டாயமாக
3X3 = 9
22. சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில் பெற்றோர் ஆசிரியர்
கூட்டத்தில் பேசுவதற்குத் தயார்.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம் !
இவை சரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ
றாயின் எதிர்ப்பதென் வேலை


24. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிகவீதிகள், இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் :

          புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்களும் வீதிகளில் வணிகம் செய்கின்றனர். பட்டு, பருத்தி நூல், முடி இவற்றைப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் இருந்தன.

    பட்டும், பவளமும் சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் குவிந்து கிடக்கும் அகன்ற வணிக வீதிகள் உள்ளன. இவ்வீதிகளில் பலப்பல பண்டங்களின் விற்பனையும் நடைபெறும். எட்டுவகைத்   தானியங்களும் குவிந்து கிடக்கும். கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

        பிட்டு வணிகம் செய்பவர், அப்பம் சுடுபவர், கள் விற்கும் வலைச்சியர், மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். உப்பு விற்கும் உமணர், வெற்றிலை விற்பவர், ஏலம் முதலான ஐந்து நறுமணப்பொருள் விற்பவர், பல வகையான இறைச்சிகள் விற்பவர் எண்ணெய் வணிகர் எனப் பலரும் வணிகம் செய்கின்றனர்.

                இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப்பொருள்கள் விற்கின்ற கடைகள் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்த இரும்புக்கொல்லர், ஓவியர், மண்பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர்

பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

25. இராமானுசர் - பூரணரிடம் எவ்வாறு திருமந்திர திருவருள் பெற்றார்?
26. நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்
பங்கு பற்றிய குறிப்புகளைக் கொண்டு 'மாணவப்பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற
தலைப்பில் கட்டுரை வரைக.
10- ஆம


Post a Comment

0 Comments